ஈரோட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்


ஈரோட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Aug 2018 3:45 AM IST (Updated: 7 Aug 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு,

ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செல்வன், கோவிந்தராஜ், ரவி, எழில் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைக்கு நேற்று மதியம் சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 110 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி கூறும்போது, ‘ஈரோடு மாநகர் பகுதியில் யாரேனும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகார்கள் இருந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்’ என்றார்.


Next Story