தஞ்சை அருகே கோனாவாரியில் உடைப்பை சரி செய்து தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
தஞ்சை அருகே கோனாவாரியில் உடைப்பை சரி செய்து தூர்வார வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்தடைந்தது. அங்கிருந்து பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறந்து விடப்பட்டது. கல்லணைக்கால்வாயில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டதால் கடந்த 26-ந் தேதி தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டையில் தெற்கு கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
மேலும் வாய்க்கால்கள், கோனாவாரியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வந்த தண்ணீர், கோனாவாரி மற்றும் வாய்க்கால்களில் செல்ல முடியவில்லை. இதனால் கோனாவாரி, வாய்க்கால்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது கல்லணைக்கால்வாய் கரை சீரமைக்கப்பட்டாலும் விளைநிலங்களில் மணல் தேங்கியுள்ளது. யாருடைய நிலம் எங்கே இருக்கிறது? என்று தெரியாத அளவுக்கு காணப்படுகிறது. 7 ஆண்டுகள் கழித்து தண்ணீர் வந்தாலும் எங்களது நிலம் சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் நேரில் ஆய்வு செய்து வாய்க்கால்கள், கோனாவாரி கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து, தூர்வாருவதுடன் நிலங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை மாதாக்கோட்டை சாலை ரோஸ்லின்நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் சிலர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், ரோஸ்லின்நகரில் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். நகரின் மையப்பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு ஏற்படும் என மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே இந்த கோபுரத்தை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story