மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே காயத்துடன் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை + "||" + A worker's murderer with a wound near Tanjore Police investigation

தஞ்சை அருகே காயத்துடன் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை

தஞ்சை அருகே காயத்துடன் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை
தஞ்சை அருகே காயத்துடன் பிணமாக கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த குருங்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது40). இவர் தஞ்சை கீழராஜவீதியில் உள்ள ஸ்வீட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இவர், வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். ஆனால் வேலை முடிந்து வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர்.


இந்தநிலையில் நாகப்புடையான்பட்டி கிராமத்தில் சாலையோரம் தலையில் காயத்துடன் சரவணன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மோட்டார் சைக்கிள் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர், வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சரவணனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது விபத்தில் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்ட விவகாரம்: கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முரண்பட்ட தகவலால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
2. சேவை வரி விவகாரம்: நடிகர் விஷால் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு
நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேவை வரித்துறை அதிகாரிகள் கடந்த 2016–ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர்.
3. பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள்; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தேவகோட்டையில் பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டது தொடர்பாக 7 மாணவர்கள் பிடிபட்டனர். இந்த சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி? என்பது குறித்து அந்த 7 பேரும் போலீசாரிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
4. அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
திருவாரூரில், அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. துறையூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
துறையூரில் 2 பேர் வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போயின. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.