மாவட்ட செய்திகள்

லாரி திருட்டு; போலீசார் விசாரணை + "||" + Lorry theft; Police investigation

லாரி திருட்டு; போலீசார் விசாரணை

லாரி திருட்டு; போலீசார் விசாரணை
நேற்று காலை அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே லாரியை நிறுத்தி விட்டு உடையார்பாளையம் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்தி இருந்த லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
உடையார்பாளையம்,

உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் மணிகண்டன் (வயது 22). இவர் தனது லாரியை வாடகைக்கு விட்டு ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே மணிகண்டன் லாரியை நிறுத்தி விட்டு உடையார்பாளையம் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்தி இருந்த லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் லாரி கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டனின் தந்தை கருணாநிதி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. அய்யனார் கோவில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
குன்னம் அருகே உள்ள அய்யனார் கோவில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
2. பள்ளிபாளையம் அருகே சரக்கு வேன் டிரைவர் படுகொலை 3 பேரிடம் போலீசார் விசாரணை
பள்ளிபாளையம் அருகே சரக்கு வேன் டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. போலி ஆதார் கார்டு தயாரித்ததாக பீகார் வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது
போலி ஆதார் கார்டுகள் தயாரித்ததாக பீகார் வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி
போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓடினர். அவர்கள் வந்த மாட்டு வண்டி கால்வாயில் விழுந்து மாடு பலியானது.