மாவட்ட செய்திகள்

நாகை: சாராயம் விற்றதை தட்டிக்கேட்ட 5 பேர் மீது தாக்குதல் - மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு + "||" + NAGAI: Attack on 5 people who have sold the bullies - Fireplace for motorbikes

நாகை: சாராயம் விற்றதை தட்டிக்கேட்ட 5 பேர் மீது தாக்குதல் - மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு

நாகை: சாராயம் விற்றதை தட்டிக்கேட்ட 5 பேர் மீது தாக்குதல் - மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு
நாகை அருகே சாராயம் விற்றதை தட்டிக்கேட்ட 5 பேர் மீது தாக்குதல் நடத்தி ஒரு மோட்டார் சைக்கிளை தீவைத்து கொளுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாராய மூட்டைகளை சாலையில் போட்டு உடைத்தனர்.
நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த பாப்பா கோவில் சமத்துவபுரத்தில் சிலர் சாராயம் விற்பனை செய்வதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் பல்வேறு தொந்தரவுக்கு ஆளாவதாகவும் புகார் எழுந்தது. மேலும் சாராயம் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துவந்தனர்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தணப்பேட்டை வெட்டுக்குளம் மேல்கரை படித்துறையில் அந்த பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மார்க்ஸ் (வயது28), கலியப் பெருமாள் மகன் மணிகண்டன் (30), செல்லத்துரை மகன் சுரேஷ் (25) பன்னீர்செல்வம் மகன் சிவா (27), சக்கரவர்த்தி மகன் பாலா (18) ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் 5 பேரையும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கையில் கத்தி மற்றும் அரிவாளுடன் வந்த சிலர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 5 பேரும் காயம் அடைந்தனர். மார்க்கசின்மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சாராய மூட்டைகளைஎடுத்து வந்து சாலையில் போட்டு உடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாராயம் விற்பனை செய்வதை தட்டிக்கேட்டதற்காக மார்க்ஸ், மணிகண்டன், சுரேஷ், சிவா, பாலா ஆகியோரை மர்ம நபர்கள் தாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண் மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தபகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பாலிதீன் கவரால் கட்டிவைக்கப் பட்டிருந்த சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்; கல்வீச்சில் 30 பஸ்கள் சேதம்
போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் 30 அரசு பஸ்கள் சேதம் அடைந்தன. மர்ம ஆசாமிகள் கர்ப்பிணியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு
ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
3. தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிப்பு: 4 முகமூடி கொள்ளையர்கள் கைது
தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி கொள்ளையடித்த பரபரப்பு சம்பவம் கண்காணிப்பு கேமராவில் சினிமா காட்சி போல் பதிவாகி இருந்தன. இதுதொடர்பாக முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பனைக்குளம் நதிப்பாலத்தில் பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு; தடுக்க முயன்ற கணவருக்கு அரிவாள் வெட்டு
பனைக்குளம் நதிப்பாலத்தில் மர்மநபர்கள் பெண்ணிடம் 9 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச்சென்றுவிட்டனர். தடுக்க முயன்ற கணவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
5. திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை
திண்டுக்கல் அருகே, பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.