மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அதிகாரி ஆய்வு + "||" + Rs.2 ½ crore development projects in Tiruvarur district - officer study

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அதிகாரி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - அதிகாரி ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூ. 2 கோடியே 59 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் பாஸ்கரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உடனிருந்தார். முன்னதாக நன்னிலம் ஒன்றியம் இனியாநல்லூர் கிராமத்தில் புத்தாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பாலத்தின் கட்டுமான பணிகள் குறித்தும், உறுதி தன்மை குறித்தும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.


அதனைத்தொடர்ந்து குடவாசல் திருவிடைச்சேரி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புத்தாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 51 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறிந்து பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செயற் பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர்.