மன்னார்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:15 AM IST (Updated: 12 Aug 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள சுவரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெயர் எழுதப்பட்ட ஒரு விளம்பரம் இருந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் அவர் பெயர் மீது சாணத்தை வீசி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நேற்று மன்னார்குடி பஸ் நிலையம் முன்பு தொல்.திருமாவளவன் பெயர் மீது சாணத்தை வீசி அவமரியாதை செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் ரமணி, நகர செயலாளர் அறிவுக்கொடி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story