தஞ்சையில் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு போட்டித்தேர்வு


தஞ்சையில் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு போட்டித்தேர்வு
x
தினத்தந்தி 11 Aug 2018 10:45 PM GMT (Updated: 11 Aug 2018 7:31 PM GMT)

தஞ்சையில் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு போட்டித்தேர்வு நேற்று நடந்தது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலும் இந்த போட்டித்தேர்வு தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

தேர்வு மையத்தினை கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கான போட்டித்தேர்வு தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டித் தேர்வுக்கு 76 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 11 பேர் தேர்வு எழுத வரவில்லை. 65 நபர்கள் தேர்வு எழுதினர். வருகை சதவீதம் 85.5 ஆகும்.

தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலையில் பாடத்தேர்வும், மாலையில் பொது அறிவுத்தேர்வும் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் உடன் இருந்தார். தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. 

Next Story