மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் தகவல் + "||" + Perambalur collector information on 121 days of Independence Day

சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் தகவல்

சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் தகவல்
சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று பெரம்பலூர் கலெக்டர் கூறியுள்ளார்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் (புதன்கிழமை) சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தனி அலுவலர்களால் நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவித்தல், கட்டி முடிக்கப் பட்டுள்ள கழிவறைகளை பயன்படுத்துதல் மற்றும் பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசித்தல். அனைத்து ஊராட்சி மன்ற தனி அலுவலர்கள் தாங்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும். அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.


சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.