ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
பென்னாகரம்,
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தொடர் மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேலும் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் இருப்பதால் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார், வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோல் கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் வந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி அணை நிரம்பியது. அதன்பின்னர் சில நாட்கள் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்மட்டமும் குறைந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் இருந்து அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 11-ந்தேதி மீண்டும் நிரம்பியது. இந்த ஆண்டில் அணை 2-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவே வெளியேற்றப்பட்டது.
இதற்கிடையே கர்நாடகத்தில் பெய்யும் மழை அளவு குறைந்தது. இதன் எதிரொலியாக அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்று நீர்வரத்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 92 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.30 அடியாக உள்ளது.

Related Tags :
Next Story