சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உடல் கருகினர்
சிவகாசி அருகே உள்ள வி.சொக்கலிங்காபுரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியைச் சேர்ந்த ஜான்பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வி.சொக்கலிங்காபுரத்தில் உள்ளது. நேற்று காலை அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் ஆரோக்கியராஜ் (வயது 32), குமார் (48) ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் ஆலையின் உரிமையாளர் ஜான்பாக்கியராஜ் மற்றும் போர்மென் மணிமாறன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story