தண்டவாள பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம், திருச்செந்தூர், கோவை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம், திருச்செந்தூர், கோவை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:45 AM IST (Updated: 14 Aug 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம், திருச்செந்தூர், கோவை பாசஞ்சர் ரெயில்களின் போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட விருதுநகர்–சாத்தூர், திருப்பரங்குன்றம்–கள்ளிக்குடி, ராமநாதபுரம்–உச்சிப்புளி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண். 56721/56722) இன்று(செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் மானாமதுரை–ராமேசுவரம் இடையே இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படும்.

பாலக்காடு–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்(வ.எண் 56769) மற்றும் திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) நாளை(புதன்கிழமை) முதல் வருகிற 31–ந் தேதி வரை திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விருதுநகர்–நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே மட்டும் ரத்து செய்யப்படும்.

பாலக்காடு–திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்(வ.எண் 56769) மற்றும் திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) நாளை(புதன்கிழமை) முதல் வருகிற 31–ந் தேதி வரை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மதுரை–நெல்லை இடையே மட்டும் ரத்து செய்யப்படும். இதில், திருச்செந்தூர்–பாலக்காடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) மட்டும் மேற்கண்ட நாட்களில் மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும்.

தாம்பரம்–நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16191/16192) நாளை ஒரு நாள் மட்டும் விருதுநகர்–நெல்லை இடையே இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படும்.

நாகர்கோவில்–கோவை பாசஞ்சர் ரெயில்(வ.எண் 56319/56320) வருகிற 31–ந் தேதி மட்டும் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் மதுரை வந்து செல்லும்.

திருச்சி– ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண் 56829) வருகிற 24–ந் தேதி, மற்றும் 27–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் ¾ மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.

திருச்சி–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண் 56829/56830) வருகிற 25–ந் தேதி மற்றும் 26–ந் தேதிகளில் மானாமதுரை–ராமேசுவரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும்.


Next Story