ரெயில் மோதி பிளஸ்–2 மாணவர் பலி


ரெயில் மோதி பிளஸ்–2 மாணவர் பலி
x
தினத்தந்தி 15 Aug 2018 3:00 AM IST (Updated: 14 Aug 2018 10:29 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ரெயில் மோதி பிளஸ்–2 மாணவர் பலியானார்.

கடலூர் முதுநகர், 

கடலூர் புதுப்பாளையம் சஞ்சீவிராயன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவருடைய மகன் சூரியகுமார் (வயது 17). இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சூரியகுமார் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள தண்டவாளத்தில் சூரியகுமார் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ரெயில்வே தண்டவாளத்தை சூரியகுமார் கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.

பின்னர் இறந்த சூரியகுமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது பற்றி ரமேஷ்பாபு கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story