உலா வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக விரட்ட வேண்டும்


உலா வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக விரட்ட வேண்டும்
x
தினத்தந்தி 16 Aug 2018 3:00 AM IST (Updated: 16 Aug 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

பேத்துப்பாறை பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக விரட்ட வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கொடைக்கானல், 

வில்பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் பேத்துப்பாறை கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்.டி.ஓ. மோகன், தாசில்தார் ரமேஷ், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் அப்துல்கராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்டுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், பழனி மெயின் ரோடு முதல் வனப்பகுதி வரை தெருவிளக்குகள் கூடுதலாக அமைக்க வேண்டும், குடியிருப்பு பகுதிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைகள் விடுத்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சில்வஸ்டர் நன்றி கூறினார்.


Next Story