நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து 2 வாலிபர்கள் பலி


நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 16 Aug 2018 3:45 AM IST (Updated: 16 Aug 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 வாலிபர்கள் பலியாகினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் வசந்தகுமார் (வயது 31). ஸ்ரீவில்லிபுத்தூர் பெரும்பள்சேரியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவரும் தங்களது மோட்டார்சைக்கிள்களில் ஸ்ரீவில்லிபுத்தூர்–சிவகாசி சாலையில் எதிர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தனர்.

சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியை தாண்டி வரும்போது இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங் உடைந்து 2 மோட்டார் சைக்கிள்களிலும் தீப்பிடித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.

விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரம் சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story