ராமேசுவரத்தில் இருந்து பாலக்காடுக்கு ரெயில் இயக்க வேண்டும்
ராமேசுவரத்தில் இருந்து பாலக்காடுக்கு ரெயில் இயக்க வேண்டும் யாத்திரை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்.
ராமேசுவரம்,
புதிய தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ள பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் சங்கத்தின் துணை தலைவராக முனியசாமி,இணை தலைவராக சுப்பிரமணி,செயலாளராக காளிதாஸ்,துணை செயலாளராக வெள்ளைச்சாமி,இணை செயலாளராக கண்ணன்,பொருளாளராக மலைச்சாமி செயற்குழு உறுப்பினர்களாக முனியசாமி,குமார்,ராம்பிரசாத்,வெங்கடேஷ்,சட்ட ஆலோசகர்களாக நம்புநாயகம்,பாலமுருகன்,பாண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கீழக்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமேசுவரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ராமேசுவரத்தில் இருந்து பகலில் சென்னனைக்கு ரெயில் இயக்க வேண்டும்,மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ராமேசுவரம்–பாலக்காடு,கோவை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்,கோவிலுக்கு வரும் பக்தர் களின் வசதிக்காக கூடுதலாக பேட்டரி கார்ஙகள் இயக்க வேண்டும் ராமேசுவரம் தீவு பகுதி மாணவர்களின் வசதிக்காக ராமேசுவரத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.