பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை


பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை
x
தினத்தந்தி 16 Aug 2018 4:15 AM IST (Updated: 16 Aug 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்பு பரிசோதனை செய்யப்பட்டன.

மதுரை,

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணி ஒவ்வொரு மாவட்ட வாரியாக நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் பயன்படுத்துவதற்காக புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுஉள்ளது. இவை மாநகராட்சி அண்ணா மாளிகையில் உள்ள பில்லர் ஹாலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுஉள்ளது.

இந்த எந்திரங்களை பரிசோதனை செய்யும் பணி நடந்தது. அதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:–

வருகிற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மதுரை மாவட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களுரூ பெல் நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி 6 ஆயிரத்து 810 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4 ஆயிரத்து 200 கட்டுப்பாட்டு கருவிகள் வந்துள்ளன. இவைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பரிசோதனை செய்யப்படுகின்றன. இந்த பணியில் 17 தொழில்நுட்ப நிபுணர்கள் உள்பட மாநகராட்சி, வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமும் 1,000 எந்திரங்களை பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Next Story