ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்று வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய கலெக்டர் மலர்விழி கூறினார்.
தர்மபுரி,
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகள் நிரம்பியதால் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஒகேனக்கல், ஊட்டமலை, நாகர்கோவில் மற்றும் நாடார்கொட்டாய் பகுதிகளை நேரில் பார்வையிட்டார். தமிழக-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் காவிரி நீர் அளவீடு செய்யப்படும் இடமான பிலிகுண்டுலு பகுதியிலும் நீர்வரத்தை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் மலர்விழி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆறு 45 கிலோ மீட்டர் தூரம் காப்புக்காடுகளுக்கு இடையே ஓடுவதால் இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வெள்ளப்பெருக்கால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒகேனக்கல், நாகர்கோவில் பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 31 வீடுகள் ஆற்று புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவற்றில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 வீடுகளை தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவற்றில் வசித்த 46 பேர் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல்-அஞ்செட்டி செல்லும் வழியில் சாலையையொட்டி உள்ள காவிரி ஆற்றில் நீரின் வரத்து சாலையின் மட்டத்திற்கு குறைந்த அளவிலேயே தற்போது உள்ளது. நீர்மட்டம் மேலும் அதிகரித்தால் மட்டுமே இந்த வழித்தடத்தில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
ஒகேனக்கல் பகுதியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இங்குள்ள பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளிகள், மசாஜ் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள் மூலம் ஒகேனக்கல் பகுதியில் இதுவரை பிளாஸ்டிக் உள்பட 20 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
நாகமரை, ஏமனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த வெள்ளப்பெருக்கால் பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.
ஆய்வின்போது உதவி கலெக்டர் சிவன் அருள், தாசில்தார் அழகு சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், கிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story