சிவகாசி பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்


சிவகாசி பகுதியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:00 AM IST (Updated: 17 Aug 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

சிவகாசி,

சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆர்.டி.ஓ. தினகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தாசில்தார் பரமானந்தராஜா தேசியக் கொடி ஏற்றினார். விழாவில் கவிஞர் சுரா சுதந்திரத்தின் சிறப்பு குறித்து பேசினார்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சி கமிஷனர் முகமது சிராஜ் தேசியக் கொடி ஏற்றினார். திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கமிஷனர் சுவாமிநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி சிவன் கோவிலிலும், திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோவிலிலும் சுதந்திரதினத்தையொட்டி சமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகாசி காளஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஸ்ரீகாளஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தேசிய உறுதிமொழியை வாசித்தார். மாணவர் வேணுகோபால், மாணவி கார்த்தீஸ்வரி ஆகியோர் சுதந்திரதின உரையாற்றினர். சிவகாசி சபையர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொழில் அதிபர் ரவி அருணாசலம் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் பிரபு தலைமை தாங்கினார். முடிவில் ஆசிரியர் அன்புசெல்வம் நன்றி கூறினார்.

சிவகாசி சி.எம்.எஸ். நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர் ஞானசேகரன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆர்.ஆர்.நகர் அமிர்தா பவுண்டேஷன் சார்பில் சுதந்திர தின விழாநடந்தது.

அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவர் சொக்கலிங்கம் கொடியேற்றினார். முதல்வர் நாகுமணி வரவேற்றார். செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கந்த வேல்சாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகமூர்த்தி கொடியேற்றினார். ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வ.உ.சி. பேரன் வாகேஸ்வரன் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். முதல்வர் கதிர்காமு, இயக்குனர்கள் ராமச்சந்திரன், கவிதா, சங்கரநாராயணன், ஜெயமுருகன், விக்னேஷ், தில்லை நடராஜன் வாழ்த்தி பேசினர். ரமணாஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பள்ளி செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயராஜ் வரவேற்றார். தொழில் அதிபர் ஆனந்தம் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். தலைமையாசிரியர் யோகலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தலைவர் பிரியங்கா சிவகுமார் நன்றி கூறினார்.

விருதுநகர் நோபிள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 72-வது சுதந்திர தினவிழா கல்லூரி சேர்மன் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலையில் நடைபெற்றது. தேசியக் கொடியை ஜெரால்டு ஞானரத்தினம் ஏற்றினார். விழாவில் கல்லூரி முதல்வர் வேல்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிட பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராஜ்மோகன் தலைமை தாங்கி தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக கப்பல்படை கமாண்டர் முருகையா கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி கோவிந்தன், அய்யாதுரை ஆகியோர் செய்திருந்தனர்.

சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். மாரத்தான் வீரர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி தலைமை முதல்வர் பாலசுந்தரம் சுதந்திரம் குறித்து பேசினார். விழாவில் பள்ளி தாளாளர் ஜெயக்குமார், பள்ளி முதல்வர் அம்பிகா தேவி, துணை முதல்வர் ஞானபுஷ்பம் கலந்து கொண்டனர்.

Next Story