கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
நாகையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்,
நாகை புதிய பஸ் நிலையம் அருகே சத்குரு சம்ஹார மூர்த்திசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் நுழைவு வாயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி மற்றும் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் மேலவாஞ்சூர் மேற்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் சிவா (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவில் உண்டியலில் இருந்து திருடிய ரூ.3 ஆயிரத்து 640-ஐ கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.

Related Tags :
Next Story