சாத்தூரில் பலத்த காற்றால் செல்போன் கோபுரம் சரிந்து மின் கம்பம் மீது விழுந்தது


சாத்தூரில் பலத்த காற்றால் செல்போன் கோபுரம் சரிந்து மின் கம்பம் மீது விழுந்தது
x
தினத்தந்தி 20 Aug 2018 3:17 AM IST (Updated: 20 Aug 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் காமராஜபுரத்தில் பலத்த காற்றால் செல்போன் கோபுரம் மின் கம்பத்தின் மீது விழுந்தது.

சாத்தூர்,

சாத்தூர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் தனியார் கட்டிடங்களின் மாடியில் செல்போன் கோபுரங்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. இதில் காமராஜபுரத்தில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மாடியில் தனியாருக்கு சொந்தமான கோபுரம் பயன்பாடின்றி கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பகுதியில் வீசிய பலத்த காற்றால் மாடியிலிருந்த கோபுரம் திடீரென்று சரிந்து தெருவில் உள்ள மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் இப்பகுதியில் சுமார் 6 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவத்தின் போது அப்பகுதியில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பை நிறுத்தி விட்டு செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்தினர்.

Next Story