சாலையின் நடுவே சைக்கிளை நிறுத்தி இடையூறு செய்தவரை அரசு பஸ் டிரைவர்– கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது


சாலையின் நடுவே சைக்கிளை நிறுத்தி இடையூறு செய்தவரை அரசு பஸ் டிரைவர்– கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2018 3:36 AM IST (Updated: 20 Aug 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

சாலையின் நடுவில் சைக்கிளை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்துகொண்டிருந்தவர்களை கண்டித்து அரசு பஸ் மற்றும் டிரைவரை தாக்கிய 4பேரை போலீசார் கைது செய்தனர்.

காளையார்கோவில்,

சிவகங்கை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஜான்கென்னடி(வயது52). இவர் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராகவும், இளையான்குடி அருகே உள்ள பெரும்பாலை கிராமத்தைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் அந்த பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் அந்த பஸ்சை இயக்கிக்கொண்டு சிவகங்கையில் இருந்து வேளாரேந்தல் கிராமத்திற்கு சென்றபோது பகையஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய மகன் கெவின்(வயது22), அருளாந்து மகன் ஆரோக்கியசாமி(48), ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே தங்களது சைக்கிளை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்களாம். இது குறித்து பஸ் டிரைவர் தனுஷ்கோடி அவர்களை விலகும்படி ஹாரன் ஒலி எழுப்பியபோது பஸ் டிரைவர் தனுஷ்கோடியுடன் கெவின் மற்றும் ஆரோக்கியசாமி தகராறு செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக பகையஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த தனசெல்வம்(49), அன்புநாதன்(31), குழந்தைராஜ் மற்றும் உசிலங்குளத்தைச் சேர்ந்த பாஸ்கள் மற்றும் சிலர் சேர்ந்து டிரைவர் தனுஷ்கோடி மற்றும் கண்டக்டர் ஜான்கென்னடி ஆகிய 2பேரை தாக்கியுள்ளனர். இதில் இவருக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து காளையார்கோவில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்து கெவின் ஆரோக்கியசாமி, தனசெல்வம், அன்புநாதன் ஆகிய 4பேரை கைது செய்தனர்.


Next Story