நாராயணசாமி–நமச்சிவாயம் ஆதரவாளர்கள் மோதல்: இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறப்போவது யார்?


நாராயணசாமி–நமச்சிவாயம் ஆதரவாளர்கள் மோதல்: இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறப்போவது யார்?
x

முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் மோதிய இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறப்போவது யார்? என்பது இன்று தெரியும்.

புதுச்சேரி,

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த இளையராஜாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமியின் ஆதரவுடன் லட்சுமிகாந்தனும், அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவுடன் ரமேசும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர மேலும் 7 பேர் தலைவர் பதவிக்கு போட்டியில் உள்ளனர். அதேபோல் 11 பொதுச்செயலாளர் பதவிக்கு 27 பேர் போட்டியிடுகின்றனர். இந்த பதவிக்காக அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு மகன் அசோக் ஷிண்டே ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் 16 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. 2–வது நாளான நேற்று 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவுகள் நேற்று மாலை முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. அப்போது இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது முதல்–அமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளரா? அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளரா? என்பது தெரியவரும்.


Next Story