கூடங்குளம் மாணவர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு


கூடங்குளம் மாணவர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 21 Aug 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

ரஷியாவில் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய கூடங்குளம் மாணவர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

மாணவர்கள் இடையே படைப்பாற்றலை ஊக்குவிக் கும் விதமாகவும், கலை திறமைகளை வெளிக்கொணரும் விதமாகவும் ‘நியூக்ளியர் கிட்ஸ்’ (அணு குழந்தைகள்) என்ற பெயரில் கலாசார நிகழ்ச்சியை ரஷிய நாட்டு அணு சக்தி கழகம் (ரோசாட்டம்) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ரஷியா உதவியோடு நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் இருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ–மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கலாசார நிகழ்ச்சியின் தொடக்க விழா 4–ந்தேதி ஹங்கேரி நாட்டில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 79 மாணவ–மாணவிகள் பங்கேற்றனர். பின்னர் ரஷியாவில் மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலாசார நிகழ்ச்சி நடந்தது.

இந்தியா சார்பில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலைய

மத்திய பள்ளியில் இருந்து மாணவிகள் நிக்ஷிதா பண்டேகர் (10–ம் வகுப்பு), பவித்ரா அனுப் (9–ம் வகுப்பு), மாணவர் ராஜேஷ் விஸ்வசுதன் (9–ம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்றனர். 3 பேரும் ஹங்கேரியில் ஒரு மாதம் தங்கி பயிற்சி பெற்றனர். அவர்களோடு அந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஏ.கே.சிந்துவும் உடன் சென்றார்.

பின்னர் ரஷியா சென்ற மாணவர்கள் 3 பேரும் அங்கு இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று அவர்கள் சென்னை திரும்பினர். அவர்களுக்கு சென்னையில் உள்ள ரஷியா கலாசார மையத்தில் அதன் இயக்குனர் கென்னடி ரொக்கலோவ், ‘ரோசாட்டம்’ பத்திரிகை செயலாளர் தரியா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் 3 பேரும் நிருபர்களிடம் கூறும்போது, ரஷியாவில் நடந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது நாட்டு கலாசாரத்தை பரப்புவதற்கும், பிற நாட்டு கலாசாரத்தை அறியும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமைந்தது என்றனர்.

1 More update

Next Story