வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்று சொல்லி அவருடன் மோதியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்று சொல்லி அவருடன் மோதியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது சொந்தமாக வீடு வாங்கி ‘புரோக்கர் கமிஷன்’ கொடுக்காத பிரச்சினையிலும் சிக்கி உள்ளார்.
மும்பை பாந்த்ரா பாலிஹில் பகுதியில் 3075 சதுர அடி பங்களா வீட்டை ரூ.20.07 கோடி கொடுத்து கங்கனா ரணாவத் விலைக்கு வாங்கி உள்ளார். முத்திரை தீர்வை கட்டணமாக ரூ.1.03 கோடி செலுத்தி உள்ளார். இந்த வீட்டை வாங்குவதற்கு பிரகாஷ் என்ற தரகர் ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு உதவி செய்துள்ளார்.
ஆனால் பேசியபடி கங்கனா ரணாவத் தரகர் கமிஷன் கொடுக்கவில்லை என்று பாந்த்ரா போலீசில் தரகர் பிரகாஷ் புகார் செய்தார். இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கங்கனா ரணாவத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“பாலி ஹில் பகுதியில் கடந்த வருடம் இந்த பங்களா வீட்டை வாங்கினேன். அப்போது புரோக்கர் கமிஷன் ஒரு சதவீதம் என்று பேசி அதற்கான தொகை ரூ.22 லட்சம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்போது இரண்டு சதவீதம் புரோக்கர் கமிஷனாக மேலும் ரூ.22 லட்சம் கேட்கின்றனர். இதற்காக என்னை தொந்தரவு செய்கிறார்கள்.
2 சதவீதம் புரோக்கர் கமிஷன் தருவேன் என்று வீடு வாங்கும்போது எந்த உறுதிமொழியும் நான் கொடுக்கவில்லை. என்னிடம் அதற்கான ஆதாரங்களும் உள்ளன. இதுகுறித்து போலீசாரிடம் தெளிவுபடுத்தி உள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story