காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகைகாயல்பட்டினம் கடற்கரையில் அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளிவாசல், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நேற்று காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் இமாம் நைனா முகமது சிறப்பு தொழுகையை நடத்தினார். பள்ளிவாசல் கத்தீபு அப்துல் மஜித் மஹ்லரி ஆலிம் குத்பா பேரூரையாற்றினார்.
பள்ளிவாசல் தலைவர் அபுல்ஹசன் கலாமி, செயலாளர் நவாஸ் அகமது, பொருளாளர் ஹசன், துணை தலைவர்கள் அமானுல்லா, முகமது அபுபக்கர், துணை செயலாளர்கள் நுகு அல்தாபி, புகாரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் அப்துல் வாஹித், த.மு.மு.க. முர்ஷித் மற்றும் 2 ஆயிரம் பெண்கள் உள்பட சுமார் 3,500 முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள்தொழுகை முடிந்ததும், ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது. ஏழைகளின் நலனுக்காக காணிக்கை வசூலிக்கப்பட்டதில் ஆண்கள் பிரிவில் ரூ.91 ஆயிரத்து 252 மற்றும் ஒரு தங்க மோதிரமும், பெண்கள் பிரிவில் ரூ.98 ஆயிரத்து 115 மற்றும் ஒரு தங்க வளையலும் இருந்தது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.