திருவண்ணாமலை: கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு தொகை விரைவாக வழங்க வேண்டும் - உரிமையாளர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை புறவழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு தொகை விரைவாக வழங்க வேண்டும் என்று நிலங்களின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் புறவழிச் சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட அளவு புறவழிச் சாலை போடப்பட்டு அத்தியந்தலில் இருந்து வேலூர் இணைப்பு சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது.
இந்த பணி சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு கல் நடப்பட்டது. தற்போது புறவழிச்சாலை அமைக்கப்படாததால் கல் நடப்பட்ட இடத்திற்கு இன்னும் அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் அத்தியந்தலில் இருந்து வேலூர் இணைப்பு சாலை வரை புறவழிச் சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று அந்தந்த பகுதியில் கிராம உதவியாளர்கள் நிலங்களின் உரிமையாளர்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து நேற்று புறவழிச் சாலைக்கு நிலங்கள் கொடுத்த உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறமால், வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்து நிலங்களின் உரிமையாளர்களை அனுப்பி வைத்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் கூறுகையில், புறவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடுத் தொகை விரைவாக வழங்க வேண்டும். சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டால், எங்களில் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இப்படி காலம் தாழ்த்தி வருவதால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதனால் நாங்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம் என்றனர்.

Related Tags :
Next Story