பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறேன் : எடியூரப்பா பேட்டி


பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறேன் : எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 21 Aug 2018 11:23 PM GMT (Updated: 21 Aug 2018 11:23 PM GMT)

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு,

பிரதமர் மோடியை நாளை (அதாவது, இன்று) டெல்லியில் சந்திக்கிறேன். அப்போது குடகு மாவட்ட வெள்ள சேதம் குறித்து விவாதிக்க உள்ளேன். அப்போது தேவையான நிதி உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்பேன். முடிந்தால் குடகில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுப்பேன். குடகு மாவட்டத்தில் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது வேதனைமிக்க கதையாக உள்ளது. அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் தவிக்கிறார்கள். பா.ஜனதா எம்.பி.க்கள் பிரதாப் சிம்ஹா, ஷோபா மற்றும் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். நிவாரண பொருட்களை 20 லாரிகளில் குடகுக்கு அனுப்பி இருக்கிறோம்.

பொதுமக்கள் முதல்-மந்திரியின் நிவாரண உதவி அளிக்க முன்வர வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்சி பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story