ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருத்துறைப்பூண்டியில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக பலியானார். முன்னதாக ஆற்றில் மாயமான அவரை கண்டுபிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அகரமானைக் கால் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பெத்தபெருமாள். இவருடைய மகன் சரவணன் (வயது30). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு ரேகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே முள்ளியாறு பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்த சரவணன், எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆற்றில் இறங்கி சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து திருத் துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) நடராஜன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு சென்று ஆற்றில் மாயமான சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் தீயணைப்பு படை வீரர்கள் கரை திரும்பி விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், சரவணனை உடனடியாக கண்டு பிடிக்கக்கோரி திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருத் துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே தீயணைப்பு படை வீரர்கள் மீண்டும் வர வழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது. நேற்று காலை 10 மணி அளவில் தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சரவணன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானது தெரியவந்தது. அங்கு உள்ள ரெயில்வே பாலத்தின் கீழே முட்புதருக்குள் சிக்கி இருந்த சரவணனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story