காவிரி ஆற்றின் அருகே உள்ள அம்மா பூங்கா விரிவுபடுத்தப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு


காவிரி ஆற்றின் அருகே உள்ள அம்மா பூங்கா விரிவுபடுத்தப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 23 Aug 2018 3:45 AM IST (Updated: 23 Aug 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

மாயனூர் காவிரி ஆற்றின் அருகே உள்ள அம்மா பூங்கா விரிவுபடுத்தப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டத்தில் பொழுது போக்கு அம்சங்களுக்கு பூங்கா இல்லாத குறையை போக்க மாயனூர் காவிரி ஆற்றின் அருகே திருக்காம்புலியூர் ஊராட்சி பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. பின்னர் கதவணை பகுதியிலிருந்து தார் சாலை வசதி, வண்ண மீன்கள் அருங்காட்சியகம், உடற்பயிற்சி கூடம், சுற்றுலா பயணிகள் உணவருந்த தனி இடம் என மேலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திறக்கப்பட்ட இந்த பூங்கா ஓராண்டை நிறைவு செய்து உள்ளது. இந்த ஓராண்டு முடிவில் பூங்காவிற்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ஆகும். இது மாதத்தில் சராசரியாக பத்தாயிரம் பேர் வந்துள்ளனர் எனக்கொள்ளலாம்.

ஆனால் கடந்த ஆடி மாதத்தில் மட்டும் அம்மா பூங்காவிற்கு வந்து சென்றோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 192 பேர் ஆகும். இதற்கு காரணம் ஆடி மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் மாயனூர் செல்லாண்டி அம்மனை வழிபட வந்த பக்தர்கள், ஆடி பெருக்கு விழாவிற்கு காவிரி ஆற்றில் புனித நீராட வந்தவர்கள் என்றாலும் அதைவிட அதிக எண்ணிக்கையில் பல்வேறு பகுதியிலிருந்தும் தற்போது காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ள நீரை பார்வையிட வந்த பொதுமக்களே ஆகும். தினந்தோறும் காலை 10 மணிக்கு திறந்து மாலை 6 மணிக்கு மூடப்படும் இப்பூங்காவை விரிவுபடுத்தி நல்லமுறையில் போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால் இப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரிக்கும். அதன் மூலம் அரசின் வருமானமும் உயரும் என சுற்றுல பயணிகள் தெரிவிக்கின்றனர். 

Next Story