தகராறை சமாதானம் செய்ய முயன்ற முதியவர் திடீர் சாவு போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே தகராறை சமாதானம் செய்ய முயன்ற முதியவர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள காட்டூர் வாழைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ராமையன் (வயது70). இவருடைய மகன் இளையராஜா (37). சம்பவத்தன்று இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் ஆசைத்தம்பி (37) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராமையன் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராமையன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் கிராம நிர்வாக அதிகாரி உமாமகேஸ்வரி திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமையனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகராறை சமாதானம் செய்ய முயன்ற முதியவர் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story