நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் எச்.ராஜா பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் என புதுக்கோட்டையில் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
புதுக்கோட்டை,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16–ந்தேதி காலமானார். இதையடுத்து அவரது அஸ்தி இந்தியா முழுவதும் உள்ள நதிகளில் கரைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்று தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமசுவரத்தில் கடலில் கரைப்பதற்காக வாஜ்பாயின் அஸ்தி, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது புதுக்கோட்டைக்கு வந்த வாஜ்பாயின் அஸ்திக்கு அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து புதுக்கோட்டையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பிற கட்சிகளுடன் பா.ஜ.க.வின் கொள்கை சார்ந்த கருத்து முடிவு என்பது வேறு, நட்பு உறவு என்பது வேறு. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்வது தொடர்பாக எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும், பா.ஜ.க. தமிழக தலைமைக்கு இதுவரை வரவில்லை.
கடந்த முறை தமிழகம் வந்த அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என கூறி உள்ளார். எனவே தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தான் போட்டியிடும். ஆனால் எந்த கட்சியோடு என்பதை தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story