இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் எச்.ராஜா பேட்டி


இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 26 Aug 2018 4:30 AM IST (Updated: 26 Aug 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.

மயிலாடுதுறை,

முன்னாள் பிரதமரும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட வாகனம் மயிலாடுதுறைக்கு நேற்று வந்தது. இந்த வாகனத்தை பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பின் தொடர்ந்து வந்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் காவிரி நீர் தொடர்ந்து மாதக்கணக்கில் ஓடியது உண்டு. ஆனால் கடந்த ஒரு மாதமாக காவிரியில் அதிக நீர் ஓடியதால் முக்கொம்பு அணை உடைந்தது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. காவிரி ஆற்றில் அணைகளுக்கு அருகிலேயே தொடரும் மணல் கொள்ளையால் 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்துள்ளன. தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை மணல் கொள்ளை தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கும். இனியும் திராவிட கட்சிகளின் ஆட்சி தமிழகத்திற்கு தேவையில்லை என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story