175 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றதற்கு தமிழக அரசே காரணம் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
இந்த ஆண்டு இதுவரையில், 175 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று உள்ளது. இதற்கு தமிழக அரசே காரணம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கும்பகோணம்,
பா.ம.க. சார்பில் கொள்ளிடம்-காவிரி ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தி கும்பகோணத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதை நம்மைத் தவிர யார் பேச முடியும். நாம்தான் உண்மையான எதிர்க்கட்சி. எனது அறிக்கையின் வழியாக நாட்டில் நடக்கும் குறைகளையும், அதை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளையும் தெரிவித்து வருகிறேன். அதை செய்தால் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும். ஆனால் இவர்கள் அதனை கேட்க மாட்டார்கள். ஏனெனில் இங்கு நடப்பது பினாமி ஆட்சி.
சோழநாடு சோறுடைத்து என்பதெல்லாம் பழம் பெருமையாகி விட்டது. நாம் தற்போது தண்ணீர், தண்ணீர் என கதறி வருகிறோம். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் வரை ஏறி, இறங்கியுள்ளோம். இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பெய்து தமிழகத்திற்கு தண்ணீர் வெள்ளமாக வருகிறது. ஆனால் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை. அனைத்தும் வீணாக கடலுக்கு செல்கிறது.
இந்த ஆண்டு இதுவரையில் 175 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது. ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலுக்கு செல்லக் கூடாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு. ஆனால் 175 டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இதற்கு தமிழக அரசே காரணம்.
தமிழகத்தில் கரிகால் சோழனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உலகத்தின் முதல் அணையான கல்லணை தற்போது கம்பீரமாக நின்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
தென்னிந்திய பாசனத் திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஆங்கிலேயர் சர் ஆர்தர் காட்டன். அந்த காலத்தில் கொள்ளிடத்தில் அதிகமாகவும், காவிரியில் குறைவாகவும் தண்ணீர் செல்வதை விஞ்ஞான ரீதியில் உணர்ந்து முக்கொம்பு அணையை கட்டியவர் அவர். கல்லணை உறுதியாக இருக்கும் நிலையில், அதைப் பார்த்து கட்டிய முக்கொம்பு அணை உடைந்ததற்கு காரணம், ஆறுகளில் மணல் அள்ளியதுதான்.
ஆர்தர் காட்டனின் சாதனையை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் வேதனையாக்கி விட்டனர். காரணம், தகுதியில்லாதவர்களை நாம் ஆட்சியில் அமர்த்தியதுதான்.
மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளனர். ஆனால் தமிழகத்தில், இதுபோன்ற திட்டங்கள் குறித்து எந்த அறிகுறியும் தெரியவில்லை. பாசனத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழகம் 18-வது இடம் வகிக்கிறது.
டெல்லியில் இருந்து மீத்தேன், பெட்ரோ கெமிக்கல் திட்டங்களை போட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க சதி நடக்கிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூற வேண்டும்.
குறைந்த மழை பொழியும் இஸ்ரேலில் உள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.47 லட்சம் வருமானம். தமிழகத்தில் 950 மி.மீ. மழை பொழிந்தும், விவசாயியின் வருமானம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கே விவசாயம் செய்வதற்கான வசதிகளை அரசு செய்து தரவில்லை. ஏனெனில் சினிமாவில் இருந்து வந்த ஆளுங்கட்சியினருக்கும், ஆண்ட கட்சியினருக்கும் விவசாயம் பற்றி தெரியாது.
பொதுத்துறைக்கு 16 ஆண்டுகளாகவும், வேளாண்மைத்துறைக்கு 11 ஆண்டுகளாகவும் நாங்கள் தனி பட்ஜெட் போட்டு வருகிறோம். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இன்றும் வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் போட்டு வருகின்றனர். தமிழக அரசிடம் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட வலியுறுத்தியும், அவர்கள் போடுவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் உழவர் பேரியக்க தலைவர் ஆலய மணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, நகர செயலாளர் கவுரி சங்கர், நிர்வாகி குஞ்சிதபாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story