மின்சாரம் பாய்ந்து பெண் பலி, மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை


மின்சாரம் பாய்ந்து பெண் பலி, மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 26 Aug 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

அறுந்து கிடந்த மின்வயரை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார். மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின்வயர் ஒன்று அறுந்து விழுந்தது. அந்த வயர் அறுந்த நிலையில் ரோட்டில் கிடந்தது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற ராணி, தேசிகாமணி, அஞ்சலி, ஞானவேல், பிரியா, குணசேகரன் ஆகியோர் அறுந்து கிடந்த வயரில் மின்சாரம் பாய்ந்ததை அறியாமல் அதனை தொட்டதாக தெரிகிறது. அப்போது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ராணி என்பவர் வழியிலேயே இறந்து விட்டார். மற்ற 5 பேர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story