அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
மும்பை-கோவா நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர்.
மும்பை,
மும்பையில் இருந்து கோவா நோக்கி நேற்று காலை அரசு சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் தபோலி-லோனரே அருகே சென்ற போது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரமாக உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உதவி கேட்டு சத்தம் போட்டனர்.
தகவல் அறிந்த தாபோலி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் விபத்தில் காயமடைந்த 30 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story