கார் டயர் வெடித்து விபத்து : ஆதித்ய தாக்கரே உயிர் தப்பினார்
சிவசேனா கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே. இவர் நேற்று கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் நாசிக்கிற்கு காரில் புறப்பட்டார்.
மும்பை,
மும்பை -நாசிக் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, திடீரென காரின் டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஓடியது. எனினும் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு காரை விபத்தில் சிக்கவிடாமல் நிறுத்தினார்.
இந்த சம்பவத்தில் காரின் உள்ளே இருந்த ஆதித்ய தாக்கரே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் காரின் டயர் மாற்றப்பட்டு, ஆதித்ய தாக்கரே அதே காரில் நாசிக் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story