மழை வெள்ளம் - நிலச்சரிவால் உருக்குலைந்த குடகு முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்புகிறார்கள்
மழை வெள்ளம்-நிலச்சரிவால் உருக்குலைந்த குடகில் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பி வருகிறார்கள். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குடகு,
கர்நாடகத்தில் மலைநாடு என்று அழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். குடகில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். குடகு மாவட்டத்தில் உள்ள 51 நிவாரண முகாம்களில் சுமார் 4 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாயமானவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், இந்திய விமான படை, கடலோர காவல் படை, தீயணைப்பு படையினர் என ஏராளமானோர் ஹெலிகேமரா மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குடகு மாவட்டத்தில் மடிகேரி, மக்கந்தூர், ஆலேறி, சுண்டிகொப்பா, பாலூர், கல்லூர், தொட்டகுந்துபெட்டா, ஜோடுபாலா, சம்பாஜே ஆகிய பகுதிகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம், நிலச்சரிவால் உருக்கலைந்த குடகில் மறுசீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தன்னார்வலர்கள் குடகிற்கு மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தை நேற்று முன்தினம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், தேசிய பேரிடர் நிவாரண நிதியை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
குடகில் தற்போது மழை நின்றுள்ளதால், மடிகேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிகிறது. இதனால் மடிகேரி டவுனை சேர்ந்தவர்கள், நிவாரண முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் மட்டும் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் இருந்தும் நிவாரண பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த 23-ந்தேதி முதல் குடகில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மடிகேரியில் மட்டும் நிவாரண முகாம்களில் வைத்து வகுப்புகள் நடந்தன. மேலும் நேற்று முன்தினம் முதல் மடிகேரியில் இருந்து கேரளா வழியாக சுள்ளியாவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
குடகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நிவாரண முகாம்களில் உள்ள குழந்தைகள் உள்பட அனைவருக்கும் சுகாதார துறை சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து மடிகேரி ஏ.பி.எம்.சி. மார்க்கெட் பகுதியில் வருவாய் துறை சார்பில் முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு கோதுமை, அரிசி, ராகி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய உணவு தொகுப்பை மந்திரி ஜமீர் அகமதுகான் வழங்கினார். இதில் கலெக்டர் ஸ்ரீவித்யாவும் கலந்துகொண்டார். ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட் களை வாங்கி சென்றனர்.
மழை வெள்ளம், நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்கள், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றையும் இழந்தனர். இந்த நிலையில், குடகில் நிவாரண முகாமில் உள்ள மக்களுக்கு நேற்று ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டன. மேலும் வாக்காளர் அடையாள அட்டையும், ரேஷன் அட்டையும் விரைவில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடகில் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்து வருபவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.3,800 மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று குசால்நகர், கனிவே உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வீடுகளை இழந்தவர்களுக்கு நேற்று ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.3,800 மற்றும் சமையல் பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.
மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு அந்தப்பகுதியில் தற்காலிகமாக அலுமினிய கொட்டகை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். குடகு மாவட்டத்தில் மழை நின்றுள்ளதால் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குடகில் பெய்த தொடர் கனமழையால் நிலச்சரிவால் மடிகேரி-மங்களூரு சாலை உள்பட ஏராளமான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளன. தற்போது சாலைகளை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் மண்அரிப்பு ஏற்பட்ட சாலைகளிலும் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியும் நடந்து வருகிறது.

Related Tags :
Next Story