கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு சட்டப்பூர்வமாக அமைந்துள்ளது. வீசியவுடன் உடைய இது ஒன்றும் மண்பானை கிடையாது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டுமென்றால் எங்கள் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்று வர வேண்டும்.
அதன் பிறகு கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவர வேண்டும். இது அவ்வளவு சுலபமானது அல்ல. சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் போதிய பெரும்பான்மை இல்லாதபோதும், பா.ஜனதாவினர் அவசர அவசரமாக ஆட்சியை அமைத்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவர்கள் ஆட்சியை பறிகொடுத்தனர்.
பா.ஜனதா நண்பர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். எண் ஆட்டத்தில் வெற்றி பெறுவது கடினம். மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று சித்தராமையா கூறி இருக்கிறார். அவரது இந்த கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர். நன்கு படித்தவர். இந்த கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்து கொள்ள மாட்டார். அரசியல்வாதிக்கு ஆசைகள் இருக்கும்.
தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென்றால் அதுபோல் பேச வேண்டியுள்ளது. தற்போதைக்கு நான் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இல்லை. இப்போது கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். சட்டசபை தேர்தல் வந்து காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். முதல்-மந்திரி பதவிக்கு கட்சி யாரை சொல்கிறதோ அவரை ஆதரிக்க நாங்கள் தயார்.
அமெரிக்காவில் கன்னட சங்க மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்க மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் செல்கிறார்கள். அதை குறை சொல்வது சரியல்ல. ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடைபெறும் மாநாட்டில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் கலந்து கொள்வது வாடிக்கையானது. அதில் பங்கேற்க முதல்-மந்திரியால் செல்ல முடியவில்லை. எனக்கும் அழைப்பு வந்தது. ஆனால் வேறு காரணங்களால் நான் அமெரிக்கா செல்லவில்லை.
குடகு மாவட்டத்தில் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வதில் மந்திரி சா.ரா.மகேஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் மந்திரிசபை கூட்டத்திற்கு கூட வரவில்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அவரை குறை கூறிவிட்டு சென்றுள்ளார். வேண்டுமென்றால் நிர்மலா சீதாராமன் இன்னொரு முறை இங்கு வந்து அந்த மந்திரியை திட்டிவிட்டு செல்லட்டும். எங்கள் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அது தான் எங்களின் நோக்கம்.
அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளமான ரூ.100 கோடியை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அந்த நிதியை சரியான முறையில் பயன்படுத்த தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

Related Tags :
Next Story