நாகையில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை


நாகையில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Aug 2018 4:15 AM IST (Updated: 28 Aug 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அருள்செல்வன் மகன் பரணிதரன்(வயது 21). இவர் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார். அப்போது பரணிதரனுக்கு, அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்தது. இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த எதிர்ப்பை மீறி பரணிதரன் பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என அந்த பெண்ணின் பெற்றோர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு பயந்து நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காதல் ஜோடியினர் வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் இருவரும் நாகை காடம்பாடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story