பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:15 AM IST (Updated: 28 Aug 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கோமல் ஊராட்சியில் உள்ள பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல், கோமல், ராதாநஞ்சை, பிச்சைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை.

இந்த பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வராமல் சம்பா சாகுபடியை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுபற்றி பல முறை பொதுப்பணித்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப்படு கிறது.

எனவே சம்பா சாகுபடியை மேற்கொள்ள ஆறு, வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கோமல் கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்்த்்தை நடத்தினர். இதில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர்் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story