ரிசர்வ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்
ரிசர்வ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ‘கிரேடு-பி’ தரத்திலான ஒப்பந்த பணியிடங்களாகும்.
நிதி, டேட்டா அனலைடிக்ஸ், ரிஸ்க் மாடலிங், பாரன்சிக் ஆடிட், புரபெசனரி காப்பி எடிட்டிங், எச்.ஆர்.எம். போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 24 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1984 மற்றும் 1-8-1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
எம்.பி.ஏ. (நிதி), புள்ளியியல் முதுநிலை படிப்பு, இதர முதுநிலை படிப்புடன் பணி சார்ந்த டிப்ளமோ படிப்புகள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.850, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 7-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான தேர்வு 29-9-2018-ந் தேதி நடக்கிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Related Tags :
Next Story