திருவட்டார் அருகே செம்மண் கடத்திய டெம்போக்கள் பறிமுதல்; 4 பேர் கைது
திருவட்டார் அருகே செம்மண் கடத்திய டெம்போக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்,
மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் கிருபன் மற்றும் போலீசார் திருவட்டார் அருகே சாரூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக 2 டெம்போக்கள் வேகமாக வந்தன.
போலீசார் அந்த டெம்போக்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். டெம்போக்களில் செம்மண் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து டிரைவர்களிடம் செம்மண் எடுத்து செல்வதற்கான ஆவணங்கள் குறித்து விசாரித்தனர். அப்போது ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து செம்மண் கடத்திய 2 டெம்போக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், டெம்போ டிரைவர்கள் சாரூர் பகுதியை சேர்ந்த விபின் (வயது27), ஜார்ஜ் பெர்னாண்டஸ் (27), கிளீனர்கள் முதலாறு பகுதியை சேர்ந்த ராஜூ (30), பாரதப்பள்ளியை சேர்ந்த ஜான் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 2 டெம்போக்களையும், கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story