தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
வேப்பனப்பள்ளி,
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனை வரவேற்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் நடந்த நிகழ்ச்சியில், நகர அவைத்தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், நகர துணை செயலாளர்கள் திம்மராஜ், நாகராஜ், மாவட்ட பிரதிநிதி சரவணன், முருகன், ராமாஞ்சி ரெட்டி, சக்திவேல், நாகராஜ், சண்முகம் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்று வேப்பனப்பள்ளியில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மகேஷ், நிர்வாகிகள் கலில், சிவா, ராமசந்திரன், கவுரி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை பழைய பஸ்நிலையத்தில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் வெங்கடசாமி, துணை செயலாளர்கள் சக்திவேல், நஞ்சப்பன், பொருளாளர் அப்துல்கலாம், நகர இளைஞரணி முஜாமில்பாஷா, சூர்யாகாந்த், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து தர்மபுரி மாவட்ட அரூரில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் முல்லைசெழியன் ,முகமது அலி, திருமால்செல்வன், அஜீத்குமார், சத்தியானந்த், குமார், குப்பன், விண்ணரசன், ராஜசேகரன், ஏலக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த வழியாக பஸ்களில் சென்ற பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Tags :
Next Story