கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ் பெற நிபந்தனை கலெக்டர் கணேஷ் தகவல்


கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ் பெற நிபந்தனை கலெக்டர் கணேஷ் தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 30 Aug 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ் பெற நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.

புதுக்கோட்டை,

குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. சேவையினை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வழங்கும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டி.வி. சேவையை புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைந்து செயல்படுத்துவதற்கு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, செட்டாப் பாக்ஸ்கள் பொதுமக்களுக்கு இந்நிறுவனத்தில் பதிவு செய்து உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் டிஜிட்டல் சேவையினை வழங்க சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு 51 ஆயிரத்து 720 செட்டாப் பாக்ஸ்கள் வரப்பெற்றது .எனவே சந்தாதாரர்களின் சி.எ.எப். படிவத்தினை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் அடிப்படையில் விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுநாள் வரை தங்களது சந்தாதாரர்களின் சி.எ.எப். படிவத்தினை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப் படாமல் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உடனடியாக நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நாளைக்குள் சி.எ.எப். படிவத்தினை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் ஆபரேட்டர்களுக்கு மட்டுமே அரசு செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும். சி.எ.எப். படிவத்தினை பதிவு செய்யாத உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அந்த பகுதியில் புதிய கேபிள் டி.வி. ஆபரேட்டர் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story