திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், 2 தங்கைகள் தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், 2 தங்கைகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெரு பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கு மேனகா (வயது 33), ரேவதி (30) கலைமகள் (26) உள்பட 5 மகள்கள் உள்ளனர். இதில் 2 பேருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இவர்களுடைய தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது மேனகாவுக்கு கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நிச்சயதார்த்தம் செய்து திருமணம் முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் மணமகன் வீட்டார் அழகேசன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அழகேசன் வீட்டில் இல்லை. அவருடைய மகள்கள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்கள் மணமகன் வீட்டாரை சரியாக உபசரிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையறிந்த அழகேசன் தனது மகள்களான மேனகா, கலைமகள், ரேவதி ஆகியோரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த 3 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேனகா, கலைமகள், ரேவதி ஆகியோர் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த அழகேசன் தன்னுடைய மகள்கள் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது ஓரளவு பேசும் நிலையில் இருந்த ரேவதி மட்டும், வாழ பிடிக்காததால் தாங்கள் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story