வேலூர் மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


வேலூர் மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:15 AM IST (Updated: 30 Aug 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு வரவேற்றார். மண்டல துணை தாசில்தார் ராஜராஜசோழன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மதிவாணன், வட்ட வழங்கல் அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வும், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சு.ரவி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முகாமை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

இதில் வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிநாராயணன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. வேலூர் உதவி கலெக்டர் க.மேகராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ராமு, ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஜி.கோபி, முகிலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பி.எஸ்.கோபி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதியோர் உதவிதொகை, வருவாய் சான்றிதழ், சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ், முதிர்கன்னி, விதவை உதவித்தொகை சான்றிதழ் உள்ளிட்டவைகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 59 மனுக்கள் ஏற்கப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், கோபி, வருவாய் ஆய்வாளர் சிவசங்கரன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம், பாலாஜி, செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் 111 மனுக்கள் பெறப்பட்டன. 27 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. முகாமில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மண்டல துணை தாசில்தார் கலைவாணி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் வடிவேல், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் தாலுகா தாதவள்ளி, கிருஷ்ணாபுரம் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. தாசில்தார் டி.எஸ்.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மண்டல தாசில்தார் பத்மநாபன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஆர்.சிவக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் பா.நாராயணன் கலந்து கொண்டு, 50 பேருக்கு முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், சிறு குறு விவசாயிகள் சான்று, ரே‌ஷன் அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தனி தாசில்தார் பாக்கியலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் வள்ளி, கிராம நிர்வாக அலுவலர் ஷான்பாஷா உள்பட அலுவலர்கள் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. வேலூர் தனி துணை ஆட்சியர் தினகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் குமார் வரவேற்றார்.

முகாமில் 210 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, நிலப்பட்டா, விதவை உதவித் தொகை, உள்ளிட்ட ரூ.11 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் மல்லப்பள்ளி, வெலக்கல்நத்தம், பையனப்பள்ளி கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் திருமலை நன்றி கூறினார்.

ஆற்காடு தாலுகா பென்னகர் மற்றும் பாரிமங்கலம் ஊராட்சிகளுக்கான சிறப்பு மனு நீதி நாள் முகாம் பென்னகர் கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பேபி இந்திரா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ஆற்காடு தாசில்தார் சுமதி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் வரவேற்றார்.

இதில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிராஜன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் உள்பட பல்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story