பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் கொளஞ்சி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் சிறப்புரை யாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், சத் துணவு ஊழியர்களுக்கு வழங் கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக கால முறை ஊதியமாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த தொகை யாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சமையலர் மற்றும் உதவி யாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் காந்தி நன்றி கூறினார்.

இதேபோல் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செய லாளர் சூசைராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக வழங்க வேண்டும். சத்துணவு மையத்தில் காலி யாக இருக்கும், சாக்குகளை அரசே திரும்பப்பெற வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story