புளியங்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலி; கணவன்– மனைவி படுகாயம்


புளியங்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலி; கணவன்– மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 31 Aug 2018 3:00 AM IST (Updated: 31 Aug 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.

புளியங்குடி, 

புளியங்குடி அருகே விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வேய்தாரம்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 49). ஆடு மேய்க்கும் தொழிலாளி. சம்பவத்தன்று அச்சம்பாட்டில் இவருடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். எனவே அங்கு செல்வதற்காக தர்மராஜ் அவருடைய உறவினர் பரமசிவன் (50), இவருடைய மனைவி பூவம்மாள் (44) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அச்சம்பாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தர்மராஜ் ஓட்டினார். பாம்பு கோவில் சந்தை அருகே வெள்ளை விநாயகர் கோவில் அருகே உள்ள ரெயில்வே பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி கீழே விழுந்தனர்.

பரிதாப சாவு

இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தர்மராஜ் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பரமசிவன் மற்றும் பூவம்மாள் ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story