எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை கிளை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. பாலிசி பிரீமியத்திற்கான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். பாலிசிதாரர் களுக்கான போனசை உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி. முதலீட்டை நலிவடைந்த வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவேண்டும். காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான காலவரையறையை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டு களாக மாற்ற வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ. அனுமதித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க எல்.ஐ.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story